Type Here to Get Search Results !

Live

WeLComeToSOORIYAN
@Sooriyantv2024 *****************************************

காவிரி நீர் பிரச்சினை | திருவாரூர்: காவிரி டெல்டா பாசனத்துக்கு உரிய தண்ணீர் திறக்காத கர்நாடக அரசைக் கண்டித்து காவிரி டெல்டா பாதுகாப்பு இயக்கம் முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.

தமிழ்நாடு சட்டசபையிலும் காவிரி நீரை திறக்க கர்நாடகாவுக்கு மத்திய அரசு அழுத்தம் தரக் கோரி தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டுக்கான காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடகா காங்கிரஸ் அரசு, இதற்கு அழுத்தம் கொடுக்காத மத்திய பாஜக அரசைக் கண்டித்து தமிழ்நாட்டின் காவிரி டெல்டா மாவட்டங்களில் காலை 6 மணி முதல் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இப்போராட்டத்துக்கு காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் அழைப்பு விடுத்திருந்தது.

தஞ்சாவூர்: கர்நாடக அரசை கண்டித்து தஞ்சாவூர் மாவட்டத்தில் புதன்கிழமை காலைமுதல் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகின்றது.
தமிழகத்துக்குரிய தண்ணீரை தர மறுக்கும் கர்நாடகா அரசை கண்டித்தும், உடனடியாக மாதந்தோறும் வழங்க வேண்டிய தண்ணீரை திறந்துவிட வலியுறுத்தியும், கர்நாடகாவில் விவசாயிகள் மற்றும் அமைப்புகளிடம் போராட்டத்தை தூண்டிவிடும் பாஜகவை கண்டித்தும், காவிரி விவகாரத்தில் ஒருதலைபட்சமாக செயல்பட்டு வரும் மத்திய அரசு கண்டித்தும் தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் இன்று காவேரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பாக ஒரு நாள் முழு அடைப்புப் போராட்டம் நடைபெறுகிறது.



இதனால் தஞ்சை, கும்பகோணம், பட்டுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5,000-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பெட்ரோல் பங்க், பால் உள்ளிட்ட அத்தியாவசிய  கடைகள் மட்டுமே திறந்து உள்ளன.


இந்த போராட்டத்துக்கு ஆதரவாக வணிகர்கள் மற்றும் காய்கறிக்கு சந்தைகள் - மார்க்கெட்டுகள் என அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. வழக்கம்போல பேருந்துகளும் ஆட்டோக்களும் இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கவில்லை.

Post a Comment

0 Comments

Click To Here On Every Day For Development

Phots Shot

8/Photography/grid-big