Type Here to Get Search Results !

Live

WeLComeToSOORIYAN
@Sooriyantv2024 *****************************************

பொதுபல சேனாவை ஏன் தடை செய்யவில்லை ? - பா.உறுப்பினர் முஷாரப் கேள்வி!

தேசிய நல்லிணக்கத்திற்கு பாதிபை ஏற்படுத்தும் வகையில் பொதுபல சேனா அமைப்பு செயற்படுகிறது. 

ஆகவே அவ்வமைப்பு தடை செய்யப்பட வேண்டும் என ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி  விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள போதும் இதுவரையில் பொதுபல சேனா அமைப்பு தடை செய்யப்படவில்லை . 
        

மாறாக அறிக்கையில்  குறிப்பிடப்படாத பல அமைப்புக்களே தடை செய்யப்பட்டுள்ளன என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரப் தெரிவித்தார்.

குண்டுத்தாக்குதலுக்கு பொறுப்பு கூற வேண்டியவர்கள்  என பெயர் குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள்  பாதுகாப்பு செயலாளர் , பொலிஸ்மா அதிபர் ஆகியோருக்கு எதிராக எவ்வித சட்ட நடவடிக்கைகளும் இதுவரையில் முன்னெடுக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் போன்ற  நடைபெற பொதுபல சேனா போன்ற அமைப்புகளே காரணமாக அமைவதாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆகவே பொது பலசேனா அமைப்பு தடைசெய்யப்பட வேண்டும் என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.ஆனால் பொதுபல சேனா அமைப்பு இதுவரையில் தடை செய்யப்படவில்லை

ஜளாதிபதி விசாரணை ஆணைககுழுவின் அறிக்கையின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் இப்போது பொது பலசேனா போன்ற அமைப்புகள் தடைசெய்யப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் பொதுபல சேனா உள்ளிட்ட ஒரு சில அமைப்புக்கள் இதுவரையில் தடை செய்யப்படவில்லை. மாறாக  அறிக்கையில் குறிப்பிடப்படாத அமைப்புக்கள் பல தடை செய்யப்பட்டுள்ளன.

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி,முன்னாள் பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக  நீதிமன்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென்றும் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு எதிராக இதுவரை எவ்வித நடவடிக்கையும் ஆரம்பிக்கப்படாத நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்பட்டுள்ளமை குறுகிய அரசியல் நோக்கங்களை  அடிப்படையாகக் கொண்டது என்பதை தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்.என்றார்.


Tags

Post a Comment

0 Comments

Click To Here On Every Day For Development

Phots Shot

8/Photography/grid-big